Friday 25 November 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - 3

போன பதிவுல நம்மளோட மூல ஓலை எப்படி எடுக்குறதுனு பார்த்தோம்... எதிர்கால பலன்கள் தெரிஞ்சுக்கிறத பத்தி இந்த பதிவுல பார்ப்போம்.. முன்னாடியே சொன்ன மாதிரி மூல ஓலைக்கும் நம்மளோட பலன்களுக்கான ஓலைக்கும் ஏதோ link இருக்கு போல... அந்த link வச்சு நம்ம பலன்களை தேடி எடுக்குறாங்க.. இது கொஞ்சம் நேரம் எடுக்கிற வேலை தான்... சில நேரங்கள்ல ஓலை கிடைச்சதும் போன் பன்றேன்னு கூட சொல்லுவாங்க... ஆனா அது கொஞ்சம் அரிது தான்...

சரி, நம்ம ஓலையை கண்டு பிடிச்சுட்டாங்கனு வச்சிக்கோங்க... நம்ம மொத்த வாழ்க்கையோட விவரங்களும் செய்யுள் வடிவுல இருக்கும்... கொஞ்சம் கடினமான தமிழ்.நம்மளோட பொதுவான பலன்களை தெரிஞ்சுக்கிறத 'பொது காண்ட பலன்கள்' அப்படினு சொல்வாங்க... அது போக ஒரு 15 காண்டம் இருக்குனு நினைக்குறேன். அதுல ஒரு குறிப்பிட்ட அம்சம் பத்தி டீடைலா சொல்வாங்க... உதாரணத்துக்கு தொழில், திருமணம், தோஷம், பரிகாரம்னு ஒவ்வொரு அம்சத்துக்கும் இருக்கு... நமக்கு விருப்பம் இருந்தா கூடுதல் பணம் கட்டி தெரிஞ்சுக்கலாம். இதுல பரிகாரம் பத்தி பின்னால சொல்றேன்..

சரி, இப்ப பொது காண்டத்தை பாக்க போறோம்னு வச்சிக்குவோமே.. அதுலயும் ஒரு விஷயம் இருக்கு... நான் வைதீஸ்வரன் கோவில்ல பாத்த சென்டர்ல  பொது காண்டத்துலயே மேலோட்டமா சொல்றதும் இருக்கு, துல்லியமா இருக்குறதுக்கு இருக்குனு சொன்னாங்க... எந்த அளவுக்கு துல்லியம்னா, நம்ம சாகப்போற நாளை கூட தெரிஞ்சுக்கலாமாம்... ஆள விடுங்க சாமின்னு மேலோட்டமாவே தெரிஞ்சுகிட்டேன்...

இப்ப உங்க வயசு 30ன்னு வச்சுக்கிட்டா, இப்ப இருந்து ஒவ்வொரு 5 வருஷத்துக்கும் எப்படி இருக்கும்னு சொல்லுவாங்க.. உங்களோட 35 வயசு வரைக்கும் என்னென்ன நடக்கும்... 35-40 ல என்னென்ன நடக்கும் அப்டினு போய்கிட்டே இருக்கும்...பொதுவா ரொம்ப முக்கியமான விஷயங்களை மட்டும் குறிப்பா(specific) சொல்வாங்க.. உதாரணத்துக்கு எனக்கு கம்பெனி மாறுறது பத்தியும் குழந்தை பிறக்கிறது பத்தியும் சொன்னாங்க...

அதே நேரத்துல எதிர்மறையான பலன்களை முடிஞ்சா அளவுக்கு சொல்லாம தவிர்த்திர்றாங்க.. இல்ல அத ஒரு சின்ன விஷயம் மாதிரி தகவல்(Hint) குடுப்பாங்க... அந்த விஷயம் நடக்கும் போது தான் அதோட வீரியத்தை தெரிஞ்சுக்க முடியும் !!! நம்மளா வலுக்கட்டாயமா கேட்டா சொல்வாங்களானு தெரியல... தெரிஞ்சுக்கவும் வேண்டாமே...

உங்களோட மொத்த பலன்களையும் செய்யுள் வடிவுல நோட்டுல எழுதி குடுத்துருவாங்க... அதோட பலன்களை படிச்சு சொல்றத ஆடியோவா ரெக்கார்ட் பண்ணியும் குடுத்துருவாங்க... அவர் வாசிக்கும் போது உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா சைகை காமிச்சா ரெக்கார்டிங்கை நிப்பாட்டிட்டு பதில் சொல்வாங்க... இதுல என்னோட அபிப்ராயம் என்னனா, அவங்களா வாசிக்கறத மட்டும் தான் நம்பலாம்... நம்ம கேட்டு அவுங்க பதில் சொல்றதெல்லாம் பெரும்பாலும் வழக்கமான ஜாதக கணக்குகள் படி சொல்றது தான்..

என்னங்க இப்ப ஓரளவுக்கு தெளிவாகுதா இந்த பிராஸஸ்.. ஒரு சில பேர் என்ன எதுன்னு தெரிஞ்சுக்காமலே நாடி ஜோதிடம்னா ஃபிராடுன்னு சொல்வாங்க.. அதெல்லாம் நம்பாதீங்க... எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் நம்ம ஊர்ல நிறையவே இருக்காங்க...

இதே மாதிரி தான் பரிகாரம்னு பேச்செடுத்தாலே ஃபிராடுன்னு சொல்வாங்க..  அதையும் டெஸ்ட் பண்ணி பாப்போமேன்னு பார்த்தேன். வழக்கம் போல குருதட்சணைன்னு சொல்லி கொஞ்சம் பணம் கொடுத்தால் நல்லதுன்னு சொல்வாங்க.. குடுக்கறதும் குடுக்காததும் நம்ம இஷ்டம் தான்.. நான் கொடுக்கலை.. அதுக்கப்புறம் நம்ம போக வேண்டிய கோவில்களை சொல்றாங்க. அங்க போய் அர்ச்சனை பண்ணுங்கன்னு சொல்றாங்க.. அவ்ளோ தான்... அந்த கோவில்களுக்கு போறதும் போகாததும் கூட நம்ம விருப்பமே.. ஒரு விதத்துல எனக்கு ஆச்சர்யமா கூட இருந்துச்சு... எனக்கு ஒரு 6 கோவில் சொன்னாங்க... அதுல 4 கோவில் என்னோட வீட்ல இருந்து 5km தூரத்துக்குள்ள தான் இருந்துச்சு... மீதி 2 கோவில் 60km தூரம் தான்...

என்னோட தனிப்பட்ட கருத்துனு கேட்டீங்கன்னா, குமுதா ஹாப்பி தான்... மகிழ்ச்சி...

2 comments:

  1. நாடி சோதிடம் பார்த்துட்டு பரிகாரம் செஞ்சா அப்புறம் வரும் காலகட்டத்திற்கான பலன் முதலில் சொன்ன பலன் போல இருக்காதல்லவா?

    ReplyDelete
  2. @சேக்காளி: நல்ல லாஜிக்கான கேள்வி...டெஸ்ட் பண்ணி தான் பாக்கணும்...பொதுவா பரிகாரம் பண்ணி எதையும் தவிர்த்திட முடியாதுனு சொல்வாங்க...impact கம்மியா இருக்கும் அவ்வளவுதான்னு சொல்வாங்க... classroom2007 வாத்தியார் கூட இதை பல தடவை சொல்லியிருக்கார்... 12B மாதிரி பரிகாரம் பண்ணினா ஒரு பலன் பண்ணலைனா ஒரு பலன்னு சொன்னாங்கன்னா நல்லா இருக்கும்...

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேக்காளி.

    ReplyDelete