Tuesday 6 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 1

நம்ம எல்லாருக்கும் ஒவ்வொரு விசயத்துல ஆர்வம் இருக்கும்...அந்த விதத்துல எனக்கு மிகவும் விருப்பமானது பயணங்களே ...

தமிழகத்தினொரு கோடியில் இருக்கும் சரித்திர பிரசித்திபெற்ற ஊர்களான இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடிக்கு சென்றிருந்தேன்... இந்த முறை எனது பயணம் மதுரையிலிருந்து தொடங்கியது.. மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக கிட்டத்தட்ட 180கிமீ தூரம்.. இந்த ஊர் பெயர்களையெல்லாம் முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும் இது வரை சென்றதில்லை.. அதனால் ஒரு கூடுதல் ஆர்வத்துடன் பயணத்தை தொடங்கினோம்..


மதுரையை விட்டு காலை 6 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டதால் எங்குமே ட்ராபிக் தொந்தரவு இல்லை... சாலையும் நல்ல தரத்திலிருந்ததால் நல்ல வேகத்தில் செல்ல முடிந்தது.. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திலெல்லாம் ராமநாதபுரத்தை அடைவதற்கும் காலை உணவுக்கான நேரத்துக்கும் சரியாக இருந்தது... ஊருக்குள் வந்ததும் ஓரிருவரிடம் விசாரித்ததில் ஹோட்டல் ஐஸ்வர்யா நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்... சரி, போய் பார்ப்போமே என்று போனால் நிஜமாகவே ஒரு ஆச்சர்யம் என்றால் மிகையாகாது... ஹோட்டல் உள்ளலங்காரங்களும் அந்த சூழலும் அருமை... எல்லா இடத்திலும் நான் கவனிக்கும் விஷயமான வாஷ்ரூமும் அவ்வளவு சுத்தமாக இருந்தது.. வழக்கமாக காலை நேரங்களில் ஆர்டர் செய்யும் தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளே ஆர்டர் செய்தோம்.. உணவுகள் உடனுக்குடன் வந்ததுடன் சுவையும் மிக அருமை... சாம்பார் மட்டும் காரம் கொஞ்சம் ஜாஸ்தி... குழந்தைகள் தான் ஆ ஊ என்றார்களே தவிர எங்களுக்கு பேஷ் பேஷ் தான்!!!


ஹோட்டல் அட்ரஸ் மற்றும் அருகிலுள்ள இடங்களை மேலே உள்ள படத்திலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.. B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே உள்ளது என்று நினைக்குறேன்.. தேசிய நெடுஞ்சாலை என்பதால் காரை நிறுத்துவதிலும் பெரிய பிரச்னை இல்லை.. ஒரு நல்ல ஓய்வுக்கப்புறம் எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்..

ராமநாதபுரத்திலிருந்து 30-40 நிமிட பயணத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடம் வந்து விடுகிறது... அது தான் பாம்பன் பாலம்.. பாம்பன் பாலத்திற்கு ஈடு கொடுக்கும் வலிமைனு சங்கர் சிமெண்ட் அறிவிப்பு இருக்கானு தேடி தேடி பார்த்தேன்... ஒன்னும் காணும் 😜😜

அங்க ஒரு டோல் பூத் ஒன்னு வச்சு வசூலிக்குறாங்க... டோல் கட்டிட்டு உள்ள நுழைந்தால் பாம்பன் பாலம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது..போலீசார் வாகனங்களை ஒரு வரிசையில் நிறுத்தி இறங்கி சென்று அந்த இடத்தின் காட்சிகளை காண அனுமதிக்கிறார்கள்.. அந்த கடலின் நிறமும் அங்கே கிடைக்கும் காட்சிகளும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதவை.. பாலத்தின் இரண்டு புறமும் கடலை பார்த்தவுடன் குழந்தைகளின் குதூகலத்துக்கு அளவே இல்லை... எத்தனையோ இணைய தளங்களில் பார்த்திருப்பேர்கள் என்றாலும் சில படங்கள் இங்கே..



படகுகளின் அணிவகுப்பு !!!


பாலத்தின் அடியில் செல்லும் சிறிய கப்பல்...


அலைகள் இல்லாத இராமேஸ்வர கடலும் அதன் நீல நிறமும் கொள்ளை அழகு... ஒரு வழியாக பாம்பன் பாலத்தை ரசித்து விட்டு இராமேஸ்வரம் தீவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்.. அடுத்த பதிவுக்கு போகுமுன் டாப் வியூவில் பாம்பன் பாலம்...



2 comments:

  1. Arun, waiting for the completion of this post.
    Question: Did you go there on a working day? I have considered Rameshwaram trip many times and dropped it worrying about the traffic jams and crowd in the bridge! Is it generally free only?
    -Ashok

    ReplyDelete
  2. @Ashok: will try to complete the post in couple of days... Regarding the traffic jam, I went on a saturday around 11AM and no traffic at all... I have also read other blogs as well on this topic and could not see any mentioning about traffic jam in Pamban bridge.. But driving and parking inside Rameswaram is a challenge bit...

    ReplyDelete