Thursday 8 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 2

பாம்பன் பாலத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் இராமேஸ்வரம் உங்களை வரவேற்க தயாராயிருக்கும்!!! ஊருக்குள் நுழைந்ததுமே ஒரு முக்கியமான மாற்றத்தை நீங்கள் உணர முடியும்.. எங்கு பார்த்தாலும் வெளேரென்ற கடல் மணல் தான் சாலையோரத்தில் தெரிகிறது.. எப்படி தான் இந்த ஊர் உருவானதோ... எப்படி இவ்வளவு பெரிய கோவிலை கட்டினங்களோனு நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக தான் இருக்கிறது... இந்த கோவில் கட்டுவதற்காக திருநெல்வேலி பக்கத்திலிருந்தும் இலங்கையின் திரிகோணமலையிலிருந்தும் கற்கள் கொண்டு வந்து கட்டினார்கள் என்றால் நிஜமாகவே பிரம்மாண்டமான சாதனை தான்...


கோவிலை நெருங்க நெருங்க சாலையும் நெருக்கமாக இருக்கிறது.. அதனால் இந்த ஊருக்குள் கார் ஓட்டுவதும் பார்க் செய்வதும் கொஞ்சம் சிரமம் தான்.. அதனால் முடிந்த அளவுக்கு கார் தேவைப்படாத மாதிரி பிளான் செய்து கொள்ளவும்... அதற்கு முக்கியமாக செய்ய வேண்டியது கோவிலுக்கு அருகில் தாங்கும் இடத்தை தேர்ந்தெடுப்பது... முக்கியமான புனிதத்தலம்/சுற்றுலாத்தமாதலால் தங்குவதற்கு நிறைய options இருக்கு... பெரும்பாலான இடங்களுக்கு இணையத்தில் rating  & reviews  இருப்பதால் நமக்கு பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.. நான் தங்கியது ஹோட்டல் பிருந்தாவன் ரெசிடெண்சி.. இவர்கள் இணையத்தில் கொடுத்திருக்கும் விலையை விட குறைந்த விலைக்கு தருகிறார்கள்.. முதலிலேயே போனில் பேசி ரூம் வாடகையை fix பண்ணிரலாம்.. இந்த பயணத்தை பொறுத்தவரை எனக்கு laxury முக்கியமில்லை.. அதனால் பேமிலி ரூம் ac வசதியுடன் நன்றாக இருந்தது... பாத்ரூம் மற்றும் படுக்கை வசதிகள் அனைத்தும் மிக சுத்தமாக இருந்தது...ஹோட்டல் முன்னாடியே கார் பார்க் பண்ணி கொள்ளலாம்.. குறைன்னு சொல்லனும்னா இந்த ஹோட்டலில் ரெஸ்டாரண்ட் வசதி இல்லை... ஆனால் ரிசப்ஷனில் ஆர்டர் செய்தால் அவர்களே ஒரு நல்ல மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்து தருகிறார்கள்.. நாங்கள் போய் சேர்ந்தது மதிய நேரமாதலால் மீல்ஸ் வாங்கி சாப்பிட்டோம்... நல்ல சுவை.. கண்டிப்பாக வயிற்றுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..😃😃

ஹோட்டலின் இணைய முகவரி: http://www.hotelbrindavanresidency.com/




மேலே உள்ள படத்தை பார்த்தாலே தெரியும், ஹோட்டலில் இருந்து கோவில் எளிதாக நடக்க கூடிய தூரம் தான்.. அதே மாதிரி அக்னி தீர்த்தமும் கடல் புறமும் கூட மிக அருகில் தான்... பொதுவாக ராமேஸ்வரத்தில் சாப்பாடு பிரச்சனை இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.. பிராண்ட் ஹோட்டல் இல்லையென்றாலும் டீசெண்டான ஹோட்டல் நிறையவே இருக்கிறது... எனக்கு தெரிந்து ஒரே பிராண்டட் ஹோட்டல் TTDC தான்... இதையும் மேலே உள்ள மேப்பில் பார்த்துக்கொள்ளலாம்... இங்கு சாப்பிட்ட அனுபவத்தை பிறகு சொல்கிறேன்... மதிய உணவுக்கு பிறகு சிறிது ஓய்வெடுத்துவிட்டு தனுஷ்கோடி சென்றோம்.. அதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்..
Non-Linear ?!!!!

எல்லாரும் ராமேஸ்வரத்திலுள்ள தீர்த்தங்கள் பற்றி கேள்வி பட்டிருப்பேர்கள்.. 64 தீர்த்தங்கள் உள்ளனவாம்.. அவற்றில் முக்கியமான 22 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளே இருக்கின்றன.. இந்த தீர்த்தங்களை பற்றி பல கருத்துக்கள் உள்ளன.. எல்லா தீர்த்த கிணறுகளும் பக்கத்துல பக்கத்துல தான் இருக்கும்.. 2 அடி தூரத்துக்குள்ள தான்.. ஆனா ஒவ்வொரு தீர்த்தத்துலயும் தண்ணீர் சுவை வேற மாதிரி இருக்கும்னு சொல்றாங்க.. எனக்கு என் மனைவி சமையல்லயும் வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியாது... இங்கயும் தெரியல... ஆனா தண்ணீர் சுவை அருமை... இந்த தீர்த்தங்கள்ல குளிச்சு முடிச்சதுக்கப்புறம் தான் நம்ம பூர்வ ஜென்மத்துல புண்ணியம் பண்ணி இருந்தோம்னா அதோட பலன்களெல்லாம் நமக்கு வர ஆரம்பிக்கும்னு இன்னொரு நண்பர் சொன்னார்... எது எப்படியோ இது கண்டிப்பாக ஒரு இனிய அனுபவமே.. காலையிலேயே ரூம்ல குளிச்சுட்டு தான் இந்த கோவிலுக்கு வந்தோம்.. முதல்ல அக்னி தீர்த்தத்துல குளிச்சுட்டு தான் மத்த தீர்த்தத்துல குளிக்க போனும்னு சொன்னாங்க... அக்னி தீர்த்தம்குறது கடலோட கரையில ஒரு இடம் தான்... அந்த இடத்தை பொய் பார்த்தீங்கன்னா அது கடல்னு நம்பவே மாட்டிங்க.. ஒரு ஏரிக்கரை மாதிரி தான் இருக்கும்... அலைகளே கிடையாது... அதே மாதிரி இன்னொரு அதிர்ச்சியான விஷயம், சுத்தம்கிறது மருந்துக்கு கூட கிடையாது... சில சிறப்பு பூஜை செய்யுறவுங்க அப்படியே அவுங்களோட உடை மற்றும் சில பூஜை பொருட்களையெல்லாம் அங்கேயே விட்டுட்டு வரணும்ங்கிறது ஐதீகமாம்... மற்றதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்... நான் பெரியவர்களுடன் போனதால் பெரிதாக மறுத்து பேச விரும்பவில்லை.. அதனால் கையில 2 சொட்டு தண்ணி எடுத்து தலையில தொளிச்சுட்டு வெளில வந்துட்டேன்.. அதுக்கப்புறம் தான் கோவிலுக்குள்ளே போனோம்.. கோவிலுக்குள்ள உள்ள தீர்த்தங்கள்ல குளிக்குறதுக்கு பணம் கட்டி அனுமதி சீட்டு வாங்கி உள்ள போகவேண்டியதுதான். நாங்க தெரிஞ்ச ஒருத்தர் மூலமா போனதால எங்க கூடயே ஒருத்தர் வந்து இந்த தீர்த்தங்களுக்கெல்லாம் வரிசைப்படி அழைத்து சென்றார். தீர்த்தம்கிறது ஒரு கிணறு தான்.. நம்ம போக போக அந்த கிணத்துல இருந்து ஒரு வாளில தண்ணி எடுத்து ஊத்துவாங்க.. அவ்வளவு தான்.. நான் அக்டோபர் மாசம் போயிருந்ததுனால தண்ணி ஜில்லுனு இருந்துச்சு... ஒரு சில தீர்த்தங்கள்ல தண்ணி இல்லாததால அதெல்லாம் skip பண்ணிட்டு போனோம்... மொத்தத்துல இது ஒரு மறக்க முடியாத அனுபவம் தான்.. இந்த ஈரத்தோட சாமி கும்பிட போக கூடாதுங்கறதுனால மறுபடியும் ரூமுக்கு போய் டிரஸ் மாத்திட்டு போலாம்னு கிளம்பினோம்.. டிரஸ் மாத்தி ரெடி ஆகுறதுக்கும் பசி எடுக்கறதுக்கும் சரியா இருந்துச்சு...

நாங்க தங்கி இருந்த ஹோட்டல்ல விசாரிச்சப்ப TTDC பத்தி சொல்லி சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாங்க.. பொதுவாக எனக்கு government institutions மேல பெருசா நம்பிக்கையில்லாம தான் போய் பார்த்தேன்.. முதல் ஆச்சர்யம் buffet.. அடுத்த ஆச்சர்யம் சுவை.. அதற்கும் மேலே விலை.. சென்னையிலிருந்து வருபவர்களுக்கெல்லாம் அந்த விலையை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்... சாப்பாடும் சரி அந்த இடமும் சரி... அருமை.. அதே மனசோட சாமி கும்பிட்டுவிட்டு மதுரை செல்ல ரெடி ஆனோம்.. ராமர் பாதம், லட்சுமண தீர்த்தம்னு இன்னும்கூட ஒரு சில இடங்கள் இருக்கு... அதெல்லாம் அடுத்த முறை வரும்போது பார்த்துக்கொள்ளலாம்னு கிளம்பிட்டோம்....

அடுத்த பதிவுல தனுஷ்கோடி அனுபவங்களை பத்தி சொல்றேன்...


1 comment: