Tuesday 25 September 2018

Thai trip - Sriracha Tiger Zoo

என்னோட வாழ்க்கையில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயங்களில் ஒன்று பயணம்.. என்னோட நண்பர் ஒருத்தர் சொன்னாரு.. உங்க ஜாதகப்படி உங்க வாழ்க்கை முழுக்க பயணம் தொடர்ந்துக்கிட்டே இருக்கும்னு.. ஒருவேளை அது உண்மை தான் போல.. அந்த விதத்துல என்னோட தாய்லாந்து பயணம் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன்னா நாங்க போனது 36 பேர் கொண்ட family trip ... தாய்லாந்துக்கு குடும்பத்தோட போறியா... 36 பேரா.. ஒரு வாரமா.. இப்படி வித விதமான ஆச்சர்யத்துடனான கேள்விகள்... கிளம்புற நாள் நெருங்க நெருங்க எனக்கும் கொஞ்சம் டென்ஷன் ஏற ஆரம்பிச்சுருச்சு...ஒருவழியா எல்லா பார்மாலிட்டியும் முடிஞ்சு பிளைட் கிளம்ப வேண்டிய கேட்டுக்கு வந்ததுக்கப்புறம் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது..

ஸ்ரீலங்கன் விமானம் மூலமா அதிகாலையில பாங்காக் வந்து சேர்ந்தோம்..நாங்களே 36 பேருங்கறதால எங்க குரூப்புக்குன்னு தனியா ஒரு volvo bus கொடுத்துட்டாங்க.. நாங்க கிளம்புற வரைக்கும் அந்த பஸ் எங்களோடயே இருந்தது.. பாங்காக்கிலிருந்து பட்டயா போகும் வழியில் நாங்கள் பார்த்த முதல் இடம் இருந்தது.. அது தான் Sriracha Tiger Zoo.

இந்த Zoo ல ஒரு மறக்க முடியாத அனுபவம் எங்களுக்காக காத்துக்கிட்டிருந்தது... Photo shoot with a live tiger 😊😊😋


நம்ப முடியலையா.. கூகுள்ல தேடிப்பாருங்க.. அந்த அளவுக்கு புலிய பழக்கி வச்சிருக்காங்க.. அது ஃபோட்டோக்கு ஒழுங்கா போஸ் குடுக்காட்டி ஒரு குச்சிய வச்சு குத்துறாங்க.. உடனே உறுமுது.. ஃபோட்டோ எடுத்துக்கிறாங்க.. Amazing!!!
இதே மாதிரி குட்டிப்புலிய மடியில் வைத்து பால் குடுக்கலாம் அனுமதிக்கிறாங்க...Crazy!!!

அதுக்கடுத்ததா பார்த்தா புலிகளை வைச்சு ஒரு ஷோ வேற பண்ணுறாங்க.. அதுல புலி டிரைனர்க்கு shake hands பண்ணுது.. முன்னங்கால் ரெண்டையும் தூக்கிட்டு பின்னங்கால்ட்டு நின்னுகிட்டே நடக்குது.. நம்ம ஊர் சர்க்கஸ்ல பாக்குற மாதிரி டேபிள்ல இருந்து இன்னோரு டேபிளுக்கு தாவுது.. தீக்குள்ள பாயுது.. அந்த அளவுக்கு டிரெய்ன் பண்ணி வச்சிருக்காங்க.. சில ஃபோட்டோக்கள் இங்கே..





இதுக்கடுத்து நாங்க பார்த்தது முதலை ஷோ.. புலி கூட கண்ணோடு கண் பாக்குது.. அத எப்படியோ பழக்கிட்டாங்க.. ஆனா இந்த முதலைகளை எப்படித்தான் பழக்கினாங்களோ தெரியலை.. முதலைய இழுத்து போட்டு விளையாடுறாங்க.. அது வால்ட்டு அடிக்க பாக்குது.. தப்பிக்கறாங்க.. உச்ச கட்டமா அத வாய திறக்க சொல்லி அப்படியே வச்சிருக்க சொல்றானுக.. அப்புறம் தலைய முதலை வாய்க்குள்ள குடுக்குறாங்க.. அய்யோ... செம திகில் தான்..
உண்மைய சொல்லனம்னா உயிரைக் கொடுத்து ஷோ நடத்துறாங்க..



இதே மாதிரி யானை ஷோ, Pig race, scorpion queen அப்படீன்னு நிறைய இருக்கு.. ஒரு 3 - 4 மணி நேரம் நல்லா பொழுது போனது..
அதற்கடுத்து அங்க இருந்து கிளம்பி நாங்க பட்டாயால தங்கி இருந்த ஹோட்டலுக்கு போயிட்டோம்.. அதுக்கப்புறம் ரெஸ்ட் தான்..

மறுநாள் தான் செம எண்டர்டெயின்மென்ட்..


No comments:

Post a Comment