Tuesday 25 September 2018

Thai trip - Coral Islands

காலைல எந்திச்சு ஹோட்டல்லயே ப்ரேக்பாஸ்ட முடிச்சுட்டு ஓர் 10 மணிக்கு .கிளம்புனோம் .. Coral Island க்கு ஸ்பீட் போட்ல தான் போகணும்.. அதுனால நேரா போட்டெல்லாம்(boat) கிளம்புற இடத்துக்கு(dock) போனோம் .. அந்த இடமே செமயா டிசைன் பண்ணி வச்சிருக்காங்க.. தரையெல்லாம் blue கலர்ல பெயிண்ட் அடிச்சிருக்கு.. ஒரு சைடு கடல்.. இன்னொரு சைடு மலை.. அந்த மலைல Pattaya City னு பெருசா எழுதிருக்கும்.. இங்க இருந்தே  போட்டோக்களும் ஆரம்பிச்சுருச்சு...


இந்த இடத்துல இருந்து ஒரு பிரிட்ஜ் வழியா நடந்து போனோம்னா ரெண்டு சைடும் நிறைய docks இருக்கும்.. அதுல நம்ம படகு எங்க இருக்கோ அதுல ஏரிக்க வேண்டியது தான் ... நிறைய படகு கம்பெனிகள் இந்த சேவையை செய்கின்றன.. இந்த படகில் ஒரு 20 பேர் வரை ஏறிக்கொள்ளலாம்.. எங்கள் குரூப்புக்கு 2 படகுகள் எடுத்து கொண்டோம் ..


இந்த படகுல ஏறி காத்த கிழிச்சுட்டு போற சுகமே தனி தான்.. அலைகள்ல படகு தூக்கி தூக்கி போடும் பொது.. ஐயோ அம்மானு படகுல ஒரு சத்தங்களும் சிரிப்புகளும் தான்.. Coral Island போறதுக்கு முன்னாடி சில adventure activities இருக்கு.. அதுல நாங்க முதல்ல போனது பாராக்ளிடிங் (Paragliding).. முந்துன படத்துலயே பாக்கலாம்.. படகை சுத்தி எவ்வளவு பாராச்சூட்ஸ் பறக்குதுனு ... இந்த விளையாட்டையும் நிறைய கம்பெனிகள் நடத்துகின்றன.. ஒவ்வொரு கம்பெனியும் அவுங்களுக்குனு ஒரு dock வச்சிருக்காங்க.. அதாவது கடலுக்கு நடுவுல பெருசா மேடை மாதிரி அமைச்சிருக்காங்க.. அங்கேயே டாய்லெட் , டிரஸ் மாத்த வசதிலாம் இருக்கு..  கீழ உள்ள படத்தை பாருங்க.. உங்களுக்கு ஓரளவுக்கு ஐடியா கிடைக்கலாம்..


இந்த படத்துல இருக்குற மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஹெல்ப் பண்ண 4 பேரு இருப்பாங்க.. இவங்க தான் நீங்க பறக்குறதுக்கும் இறங்குறதுக்கும் ஹெல்ப் பண்ணுவாங்க.. முதல்ல உங்களுக்கு பாராச்சூட் மாட்டிவிட்டு.. சுத்தி பெல்ட்டெல்லாம் போட்டுட்டு ஒரு கயறு மூலமா ஒரு ஸ்பீட் போட்ல கட்டிருவாங்க... போட் நகர ஆரம்பிச்சதும் நீங்களும் ஓடி போய் ஒரு குதி.. அவ்வளவு தான் பறக்க ஆரம்பிச்சிடுவீங்க... இந்த மாதிரி...


செமயா இருக்கும்ல.. ஒரு 5 நிமிஷம் கிட்ட வானத்துல பறவை மாதிரி பறந்துட்டு திரும்ப இறங்கிறலாம்.. நீங்க விருப்பப்பட்டா கடல்ல உங்கள முக்கி கூட எடுப்பாங்க.. பாதுகாப்பை பொறுத்த வரை பிரச்சனையே இல்லை ... செம என்ஜாய் தான்..10 வயசுல இருந்து 60  வயது வரை எங்க குடும்பத்துல நிறைய பேரு இதை என்ஜாய் பண்ணாங்க...

பாராக்ளிடிங்குக்கு அப்புறம் Snorkling, scuba diving  கூட இருக்குதுனாங்க...  நெட்ல சுட்டது  ..


அது கொஞ்சம் காஸ்டலியா இருந்ததால வேணாம்னுட்டு நேரா பீச்சுக்கு போலாம்னு கிளம்பிட்டோம்...வெள்ளை வெளேர்னு மணலும் நீல நிறத்தில் கடலுமாய் பீச் கண்கொள்ளா காட்சின்னு தான் சொல்லணும்... கோவால இருக்கிற மாதிரி இங்கயும் பீச் ஓரத்துல நிறைய shacks இருக்கும்.. shacks னா ஜஸ்ட் குடிசை மாதிரி போட்டு அதுல ரெஸ்ட் எடுக்கறதுக்கு chair மாதிரி போட்டிருப்பாங்க... கூடவே சரக்கு சைடு டிஷ் எல்லாம் கிடைக்கும்.. தண்ணில இறங்கி விளையாடிட்டு ரெஸ்ட் எடுக்கணும்னா இங்க வந்துக்கலாம்.. இங்கயும் banana boat ride மாதிரி விளையாட்டுகள் இருக்கு.. என்ஜாய்மென்டுக்கு பஞ்சமே இல்லனு தான் சொல்லணும்..






மனசு நிறைய சந்தோஷத்தோட ஹோட்டலுக்கு திரும்பினோம்... அடுத்ததாக நாங்க போன இடம் பொதுவாக டூரிஸ்டுகள் அவ்வளவாக போகாத இடம்.. ஆனால் நமது இந்திய பாரம்பரியத்தோட நெருங்கிய சம்பந்தமுள்ள ஒரு இடம்!!!! 




No comments:

Post a Comment