Sunday 20 November 2016

பயணம் - திருவிசாநல்லூர்

நண்பர்களே... எனக்கு பிடித்த இரண்டு கோவில்களை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்...இரண்டுமே கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ளன..
  1. தாராசுரம் ஐராவதேஸ்வர் கோவில்
  2. திருவிசாநல்லூர் சிவயோகிநாதர் கோவில்
சென்னையிலிருந்து 350km தொலைவிற்குள் இருப்பதால் வார இறுதியில் சென்று வர ஏற்ற இடம். காரில் செல்ல ஒரு 6 மணி நேரம் ஆகும்.
darasuram_map
சென்னையில் இருந்து ரெகுலராக travel பண்றவுங்களுக்கு தெரியும் செங்கல்பட்டு டோல்கேட்டை தாண்டுவது எவ்வளவு முக்கியம்னு.. காலை 6 மணிக்கு முன்னால் அதை தாண்டிவிட்டால் பயண நேரம் வெகுவாக குறையும். உங்கள் பயணத்தை பிளான் பண்ணும் போது இதை மனதில் வைத்து கொள்ளவும்.
அடுத்த முக்கியமான விஷயம் காலை உணவு.இதை 2 விதமா பிளான் பண்ணலாம். ஒன்னு நம்மளே சாப்பாடு செஞ்சு எடுத்துட்டு போகிறது... இல்ல வழியில் நல்ல ஹோட்டல்ல சாப்பிடுகிறது.. இது ரெண்டுக்குமே பொருத்தமான இடம் மதுராந்தகத்தை தாண்டியதும் இருக்கு...
99 காபி - இந்த கடைல கார பார்க் பண்ண நல்ல இட வசதி இருக்கு.. அதோட நீங்க கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடவும் வசதியா டேபிள், சேர் இருக்கு. காபி, வடை,தண்ணி போன்றவற்றை அவங்க கடைல வாங்கிக்கலாம். ரொம்ப ரொம்ப முக்கியமா சுத்தமான டாய்லெட் வசதியும் இருக்கு..
99km
ஹோட்டல் ஹரிதம் -நல்ல டேஸ்ட், நல்ல வசதி
haritham
நல்லா சாப்டாச்சா.. ரிலாக்ஸ் பண்ணியாச்சா... கிளம்ப வேண்டியது தான்.. எனக்கு தெரிஞ்சு ஒரே ரூட்டு விக்கிரவாண்டி டோல் தாண்டி லெஃப்ட்ல எடுத்து நெய்வேலி வழியா போக வேண்டியது தான்... நீங்க நெய்வேலியை நெருங்குறப்ப அடுத்த பிரேக்குக்கான நேரம் வந்திருக்கும்... நான் பெரும்பாலும் என்னோட பெற்றோர் மற்றும் குழந்தைகளோட போறதுனால 3 மணி நேரத்துக்கு ஒரு பிரேக் கண்டிப்பா எடுக்குற மாதிரி வந்துரும்.. நெய்வேலி ஆர்ச்சுக்கு முன்னாடியே ஹோட்டல் அர்ச்சனா கார்டன்ஸ் இருக்கு... இதுவும் ரொம்ப டீசெண்டான ஹோட்டல்.. கொஞ்சம் expensive. நல்ல இடம்... நல்ல ரிலாக்ஸ் பண்ணிட்டு பயணத்தை தொடரலாம்...
இந்த பயணத்துலயே உள்ள ஒரே ஒரு மோசமான விஷயம்னா அது ரோடு கண்டிஷன் தான். விக்கிரவாண்டில திரும்பினதுல இருந்து அணைக்கரை தாண்டுற வரைக்கும் ரோடு ரொம்ப மோசம்..பல வருஷமாவே இப்படி தான் இருக்கு.. அங்கங்க கொஞ்சம் patch work நடக்குது அவ்ளோ தான்.. இதெல்லாம் பார்த்தா என்ஜாய் பண்ண முடியுமா...
தொடர்ந்து போனோம்னா கொள்ளிடம் ஆற்றை கடந்ததும் ஒரு ரைட் எடுத்து உள்ள போனா திருவிசாநல்லூர் வரும்... உள்ள போறது ஒரு 2km தூரம் தான்... ஆனால் முழுவதும் பச்சை பசேல்னு வயலும் தென்னை மரமுமாக அட்டகாசமான இடம்... அதும் மழை காலத்துக்கு அப்புறம் போனீங்கன்னா கண்கொள்ளா காட்சியாய் இருக்கும்.வயலுக்கு நடுவுல கோவில் ரொம்ப அற்புதமா இருக்கும்..
img_20150411_110704
சின்ன கோவில் தான் ஆனால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.கோவில் உள்ள நுழைந்ததும் ஒரு அழகிய பெரிய மகிழ மரம் இருக்கும். அதன் போட்டோ என்னிடம் இல்லை.. உங்களுக்கு ஒரு நல்ல surprise ஆக இருக்கும்..கும்பகோணம் சென்றால் மறக்காமல் சென்று வாருங்கள்.
img_20150411_105331
பின் குறிப்பு:
  1. இந்த கோவில் சமீபத்தில் புதுப்பிக்க பட்டிருக்கலாம்...கூகிளில் இன்னும்  இந்த கோவிலின் பழைய படங்கள் தான் உள்ளன. ஏமாற வேண்டாம்.
  2. இது ரிஷப ராசிக்குரிய கோவில். மேலும் விவரங்களுக்கு கூகிளாண்டவரை கேட்கவும்.
  3. இதற்கு மிக அருகில் நடந்து செல்லும் தொலைவில் கடக ராசிக்குரிய கோவிலான கற்கடேஸ்வரர் கோவிலும் உள்ளது.
  4. GPS coordinates - 79.420907,11.006861. இதை பயன்படுத்துவது பற்றி அறிய எனது இந்தியாவில் GPS பதிவை பார்க்கவும்.

No comments:

Post a Comment