Sunday 20 November 2016

பயணம் - தாராசுரம்

ஏற்கனவே என்னுடைய திருவிசநல்லூர் பயண அனுபவத்தை பகிர்ந்திருந்தேன்... அங்கிருந்து நான் சென்ற இடம் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள தாராசுரம்.... தூரம் என்று பார்த்தால் வெறும் 15km தான்.. ஆனால் டிராபிக்,oneway காரணமாக கொஞ்சம் லேட்டா ஆகலாம்..அதிகபட்சம் 45 நிமிஷம் ஆகலாம் அவ்வளவு தான்..
darasuram_map2
கோவிலை ஒட்டியே கார் பார்க்கிங் மற்றும் டாய்லெட் வசதிகள் உள்ளன.இந்த கோவில்  UNESCO World Heritage Site கீழ் வர்றதுனால அடிப்படை வசதிகள் நன்றாகவே உள்ளது. மேலும் அதிக விவரங்களுக்கு wiki page.
dara2
கோவில் உள்ளே வந்து விட்டால் நிறைய திறந்த வெளியும் சிற்பங்களும் உங்களை சோழர் காலத்தை பற்றி கண்டிப்பாக சிந்திக்க வைக்கும்...குதிரைகளால் இழுக்கப்படும் ரத வடிவிலான மண்டபம் இந்த கோவிலின் சிறப்பு...இன்னொரு நல்ல விஷயம், கூட்டம் அதிகம் இல்லாததால் நிதானமாக ரசிக்கலாம்..
dara1



தஞ்சை கோவிலும் சரி இந்த கோவிலும் சரி பக்தியை விட கலை ரசனைக்கு தான் நிறைய விஷயங்கள் உள்ளன.. அர்ச்சகர்களும் நன்கு பழகுகிறார்கள். லிங்கத்துக்கு மிக அருகில் சென்று வழிபடவும் அனுமதிக்கிறார்கள்...
dara3
கோவிலுக்கு வெளியே பெரிய புல்வெளியும் செடிகளும் குடும்பத்துடன் உட்கார்ந்து பொழுதை போக்க நல்ல இடம்.. அருகிலேயே பட்டு நெசவு செய்யும் குடும்பத்தினர் வீடுகளும் உள்ளது..பிடித்திருந்தால் நேரடியாக அவர்களிடமே பட்டு புடவைகளும் வாங்கலாம் ...






மற்றபடி கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அதுவும் கலை ரசனைக்கும் பொழுது போக்குக்குமான கோவிலே.. அதுவும் சென்னையிலிருந்து கும்பகோணம் வரும் வழியில் தான் உள்ளது.. அந்த கோவிலை பற்றிய நிறைய தகவலைகள் இணையத்தில் போதுமான அளவு உள்ளது..
இன்னொரு இனிய விஷயம்... பொன்னியின் செல்வன் மற்றும் உடையார்  நாவலில் வரும் பல பாத்திரங்களின் பெயர்களில் உள்ள ஊர்களை இந்த பயணத்தில் நீங்கள் பார்க்கலாம்.
நான் இது வரை கும்பகோணத்தில் தங்கியதே இல்லை.. பெரும்பாலும் திருக்கடையூரில் தான் தங்குவேன். அதனால் கும்பகோணத்தில் உள்ள தங்குமிடங்கள் பற்றி எனக்கு ஐடியா இல்லை. ஆனால் நிறைய Homestay options இணையத்தில் உள்ளன.
கமர்சியலாக்கப்பட்ட கோவில்களை விட இந்த மாதிரி கோவில்கள் நல்ல அனுபவத்தை தருகின்றன.. முடிந்தால் ஒரு முறை சென்று வாருங்கள் ... 

No comments:

Post a Comment