Tuesday 22 November 2016

நாடி ஜோதிடம் -நம்பலாமா?! - 2

போன பதிவுல நாடி ஜோதிடத்துல முதல் ஸ்டெப் கைரேகை எடுப்பாங்கன்னு சொன்னேன்ல, அது என்னனு பாக்கலாம்.. நம்ம கைரேகைல இருக்குற கோடுகள் புள்ளிகளை வச்சு கைரேகையை பலவிதமா வகை படுத்தி வச்சிருக்காங்க... உதாரணத்துக்கு என்னோட கைரேகை பேரு மகுடமணி கீற்று ரேகைனு சொன்னாங்க. இதை மாதிரி எத்தனை ரேகை இருக்குனு தெரியல.. ஆனா இது தான் ஓலை சுவடி கண்டு பிடிக்கறதுல முதல் ஸ்டேப்.. இந்த ஒவ்வொரு வகையான ரேகைக்கு பொதுவா 3-5 ஓலை கட்டு இருக்கு... ஒவ்வொரு கட்டுலயும் தோராயமா ஒரு 50 ஓலைகள் இருக்கும்.. இந்த ஓலை கட்டுல இருந்து நம்மளோட ஓலையை கண்டு பிடிக்கறது அடுத்த ஸ்டெப்...

அது ஒரு iterative method... அதாவது ஒவ்வொரு ஓலைலயும் ஒருத்தர பத்தின குறிப்புகள் இருக்கும்... அது நமக்கு பொருந்துதுன்னா ஆமா சொல்லணும்.. இல்லைனா இல்லைனு சொல்லணும் 😏 ஆனா நீங்க வேற எந்த பதிலோ கூடுதல் தகவலோ தரத்தேவை இல்லை.. அவுங்க வாசிச்சு சொல்றதுல ஒரு குறிப்பு உங்களுக்கு மேட்ச் ஆகலைனா கூட அது உங்களுக்கான ஓலை இல்லை.. உதாரணத்துக்கு இப்படி வருதுன்னு வச்சுக்குவோம்...

வாசிப்பவர்: உங்க கூட பிறந்தது ரெண்டு பேரு
நீங்க : ஆமா
வாசிப்பவர்: ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கச்சி
நீங்க : ஆமா
வாசிப்பவர்: தங்கச்சிக்கு திருமணம் ஆகிருச்சு
நீங்க : இல்லை

இப்ப ஒரு குறிப்பு உங்களுக்கு பொருந்தாதனால ஓலையை வாசிக்கறவர் அடுத்த ஓலைக்கு போயிருவார்... இப்படியே ஒவ்வொரு ஓலையா வாசிச்சு தான் உங்களுக்கு உரிய ஓலையை கண்டு பிடிக்க  முடியும்.. என்னோட நண்பன் ஒருத்தனுக்கு, அப்பா அம்மாவோட பேரு கூட match ஆகிருச்சு... ஆனா மனைவி பேரு தப்பா இருந்துச்சு... அதுக்கு வாசிக்கறவர் சொன்னாராம், நீங்க ஒருவேளை இந்த பெயருடைய பெண்ண கல்யாணம் பண்ணி இருந்தீங்கன்னா உங்க வாழ்க்கை இப்ப இருக்கிற மாதிரி இல்லாம வேற மாதிரி கூட  இருந்திருக்கலாம்.... 12பி படம் பாக்குற மாதிரி இருக்குல்ல... அதுனால ஓலைல இருக்குற எல்லா குறிப்பும் பொருந்துனா தான் அது உங்களோட ஓலை... அது வரைக்கும் உங்களுக்கும் சரி, வாசிக்கறவர்க்கும் சரி பொறுமை கொஞ்சம் வேணும்...😊
இதுக்கு இன்னொரு உதாரணம் கொடுக்கறதுனா என்னோட cousin மனைவிக்கு ரெண்டு பெயர்... அதாவது வீட்டுல கூப்பிடுறது ஒன்னு... official பெயர் இன்னொன்று... ஓலைல ரெண்டு பெரும் அப்படியே இருந்துச்சு... அதே மாதிரி இன்னொன்னு சொல்லுவாங்க,.. ஓலைல பெயரெல்லாம் பூடகமா தான் இருக்கும்.. exact ஆ இருக்காதுன்னு... அதெல்லாம் நம்பவே நம்பாதீங்க...  பேரெல்லாம் அப்படியே முழுசா இருக்கும்... மிஞ்சி போனா வடமொழி எழுத்து தமிழ்ல இருக்கும்... இல்ல மெய்யெழுத்துல புள்ளி இல்லாம இருக்கும்.. ஆனா கண்டிப்பா உங்க பேரு , உங்க அப்பா & அம்மா பேரு, கல்யாணம் ஆகி இருந்தா மனைவி/கனவன் பேரு இருக்கும்... உங்களுக்கு தமிழ் வாசிக்க தெரியும்னா நீங்களே படிச்சு பாக்கலாம்.. த்ரில்லான அனுபவமா இருக்கும்.. குழந்தைங்களோட வயசு மற்றும் ஆனா பெண்ணானு சொல்வாங்க ஆனா பெயர் இருக்காது..
சில பேர் சொல்வாங்க..ஒவ்வொரு குறிப்பா வாசிக்கும் போது நாம சொல்ற பதிலை வச்சு கொஞ்சம் கொஞ்சமா நம்ம டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி நம்மட்டயே திரும்ப சொல்லுவாங்கனு... அதெல்லாம் கிடையவே கிடையாது... நானோ என்னோட நண்பர்களோ அந்த மாதிரி feel பண்ணல... ஒருவேளை ஏமாத்து பேர்வழிகள்ட்ட மாட்டிருந்தோம்னா அப்படி நடந்திருக்கலாம்...

எனக்கெல்லாம் இப்படி தான் ஓலை ஆரம்பிச்சது... உங்களுக்கு இரண்டு சகோதரர்கள்.. ஒருவர் அரசாங்க உத்தியோகத்துல இருக்கார்.. இன்னொருத்தர் பிரைவேட்ல வேலை பாக்குறார்.. நீங்க பிங்கள வருடத்துல பிறந்திருப்பீங்க.. அப்படியே போயி எல்லா டீடைலும் பக்காவா மேட்ச் ஆச்சு... அதாவது சொந்த வீடு இருக்கு, வெளி நாடு போயிட்டு வந்திருப்பீங்கங்குற அளவுக்கு proof இருக்கு ஓலைல..

so , எல்லா குறிப்புகளும் match ஆகி உங்க ஓலையை கண்டு பிடிச்சுடீங்களா.. அது தான் உங்க ஓலைங்கறதுக்கு சாட்சியா தான் அந்த குறிப்புகளை சொல்லி இருப்பாங்க.. இந்த ஓலையை வச்சு தான் உங்களோட எதிர்கால பலன்கள் உள்ள ஓலையை கண்டு பிடிச்சு அதை ஒரு நோட்டுல எழுதிட்டு வருவாங்க.. அது அடுத்த ஸ்டெப்..

அதை பத்தி அடுத்த பதிவுல பேசலாமா ?!!

No comments:

Post a Comment